/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
முன்னாள் எஸ்.ஐ., கொலையில் தலைமறைவான பெண் கைது
/
முன்னாள் எஸ்.ஐ., கொலையில் தலைமறைவான பெண் கைது
ADDED : ஏப் 18, 2025 02:34 AM

திருநெல்வேலி:திருநெல்வேலியில் நிலத்தகராறில் நடந்த கொலை வழக்கில் ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த நுார்னிஷா நேற்று கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலியை சேர்ந்த முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் ஹுசேன் 61. நிலம் தொடர்பான பிரச்னையால், மார்ச் 18ல் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்த கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவ்பிக், மனைவி நுார்னிஷா உள்ளிட்டோரை போலீசார் தேடிவந்தனர். இதில் முகமது தவ்பிக் போலீசாரால் சுட்டு கைது செய்யப்பட்டார். ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த நுார்னிஷா, நேற்று தனிப்படையினரால் கைது செய்யப்பட்டு, இரவு நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட முகமது தவ்பிக், அக்பர் ஷா 33, பீர்முகமது 37, கார்த்திக் என்ற அலிஷேக் 32, ஆகியோர் நேற்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.