/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஆற்றில் குளித்த பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறிப்பு
/
ஆற்றில் குளித்த பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறிப்பு
ஆற்றில் குளித்த பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறிப்பு
ஆற்றில் குளித்த பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறிப்பு
ADDED : நவ 10, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம், கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், மானுாரை சேர்ந்தவர் முத்துலட்சுமி, 40. இவர், நேற்று முன்தினம் மாலை, குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, டூ - வீலரில் வந்த மர்ம நபர்கள் மூவர், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, முத்துலட்சுமியின் கழுத்தில் இருந்த, 4 சவரன் தங்க சங்கிலியை பறித்து தப்பினர். முத்துலட்சுமி புகாரின்படி, மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.