நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த கிளிட்டஸ் மகன் ஜஸ்டின் 24. கப்பலில் வேலை செய்ய முயற்சி செய்தார். இதற்காக திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள கடல் சார் பயிற்சி கல்லூரியில் படிக்க வந்துள்ளார்.
கல்லூரிக்கு செல்லாத நிலையில் நேற்று காலை நவ்வலடி அருகே கோடவிளை கடற்கரையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் தூத்துக்குடியில் பெண்ணை காதலித்துள்ளார். அதில் ஏற்பட்ட பிரச்னையில் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து உவரி போலீசார் விசாரிக்கின்றனர்.

