ADDED : நவ 28, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே கலிதீர்த்தான்பட்டியை சே ர்ந்தவர் குமரேசன், 29; பாப்பாக்குடியில் விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து மோட்டார் அறையில் துாங்கினார். நேற்று காலை முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தார்.
மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது. பாப்பாக்குடி போலீசார் கூறுகையில், 'குமரேசன் காதலித்த பெண்ணை, மற்றொருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரிக்கிறோம்' என்றனர்.

