sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அடிப்படை வசதியின்றி தவிக்கும் பூங்கா நகர் மக்கள்

/

அடிப்படை வசதியின்றி தவிக்கும் பூங்கா நகர் மக்கள்

அடிப்படை வசதியின்றி தவிக்கும் பூங்கா நகர் மக்கள்

அடிப்படை வசதியின்றி தவிக்கும் பூங்கா நகர் மக்கள்


ADDED : ஜூலை 13, 2011 05:21 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பூங்கா நகர் பகுதி மக்கள், சாலை, குடிநீர் என, அடிப்படை வசதியின்றி மிகவும் அவதிப்படுகின்றனர்.திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பூங்கா நகர், தேவா நகர் ஆகிய பகுதிகளில் கோவர்தன் தெரு, நேதாஜி தெரு, படேல் தெரு, திருக்குமரன் தெரு, இஸ்ரேல் தெரு, பாரதியார் தெரு, திருவள்ளுவர் தெரு ஆகிய தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் மட்டும், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இவர்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கும், தேரடி, பஸ் நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளுக்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். காரணம், இப்பகுதியில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் இதுவரை சாலை அமைக்கப்படாதது தான் என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதனால், மழைக் காலங்களில் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து, நகராட்சி வார்டு கவுன்சிலர்களும் கண்டுகொள்வதில்லை.இதனால், அவ்வழியே செல்லும் இருசக்கர வாகனங்கள் இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் வந்து விடுவதால், தொடர் விபத்து ஏற்படுகிறது. இரவில் இவ்வழியில் செல்லும் முதியவர்கள், கண் தெரியாமல் பள்ளத்தில் விழுந்து எழுந்து செல்கின்றனர்.

மேலும், பள்ளி செல்லும் மாணவர்களும் குழிக்குள் விழுந்து எழுகின்றனர். தெருவில் ஓடி விளையாடும் சிறுவர்களும் பள்ளத்தில் விழுந்து எழுந்து கை, கால், முகம் ஆகிய இடங்களில் காயத்துடன் வீட்டிற்குச் செல்கின்றனர்.இப்பகுதியில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அவசர உதவிக்கு ஆம்புலன்சோ, தீயணைப்பு வாகனமோ செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும், தெருக்களில் ஆங்காங்கே உள்ள குழாய்களில் தான் இப்பகுதி மக்கள் குடிநீர் பிடித்து வருகின்றனர்.எனவே, இப்பகுதி மக்கள் நலன் கருதி உடனடியாக பணியை விரைந்து முடிக்க, திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us