ADDED : ஆக 04, 2024 02:25 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த மணலி செல்லும் மாநில நெடுஞ்சாலையில், கவுண்டர்பாளையம், கொண்டக்கரை உள்ளிட்ட பகுதிகளில், சாலையோரங்களில் மண் குவிந்துள்ளது.
கனரக வாகனங்கள் இதன் மீது பயணிக்கும்போது, புழுதியாக பறக்கிறது. இது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது புழுதி படிவதால் அவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது .
இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். மேலும் மண் குவியல்களை தவிர்க்க இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையின் நடுவில் பயணிப்பதால், பின்னால் வரும் கனரக வாகனங்களால் அசம்பாவிதங்கள் நேரிடும் அபாயமும் உள்ளது. சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் மண்ணால், மழைக்காலங்களில் மழைநீர் வெளியேறாமல் சாலையில் தேங்கும் நிலை உள்ளது.
மேலுார் - மணலி சாலையின் ஓரங்களில் குவிந்திருக்கும் மண்ணை, அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.