/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கணினிமய திட்டத்தில் தொடர்கிறதுகுளறுபடி டாஸ்மாக் கடை ஊழியர்கள் புலம்பல்
/
கணினிமய திட்டத்தில் தொடர்கிறதுகுளறுபடி டாஸ்மாக் கடை ஊழியர்கள் புலம்பல்
கணினிமய திட்டத்தில் தொடர்கிறதுகுளறுபடி டாஸ்மாக் கடை ஊழியர்கள் புலம்பல்
கணினிமய திட்டத்தில் தொடர்கிறதுகுளறுபடி டாஸ்மாக் கடை ஊழியர்கள் புலம்பல்
ADDED : மார் 04, 2025 01:01 AM

திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் கணினிமய திட்டத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதாக ஊழியர்கள் புலம்புகின்றனர்.
தமிழகத்தில் முதற்கட்டமாக திருவள்ளூர், திருச்சி நெல்லை உட்பட 15 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கணினிமய திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஸ்கேன் செய்து விற்பனை செய்யும் போது, அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதால், குளறுபடி ஏற்படுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம், 4,830 கடைகள் வாயிலாக பீர் மற்றும் மதுபானங்களை விற்கிறது; 11 நிறுவனங்களிடம் இருந்து மது வகைகளையும், ஏழு நிறுவனங்களிடம் இருந்து, பீர் வகைகளையும் கொள்முதல் செய்கிறது.
ஆலைகளில் இருந்து மதுபான வகைகள், டாஸ்மாக் கிடங்கிற்கு லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன; அங்கிருந்து, மதுக்கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன.
கடைகளில் மது வகை இருப்பு, தேவைப்படும் மது வகை உள்ளிட்ட விபரங்களை மேற்பார்வையாளர்கள், மேலாளர்களுக்கு தெரிவிக்கின்றனர். அதற்கு ஏற்ப, மது வகைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
குறிப்பிட்ட நிறுவனங்களின் மது வகைகளுக்கு முன்னுரிமை அளிப்பது, அரசு நிர்ணயம் செய்திருக்கும் விலையை விட கூடுதலாக விற்பது உள்ளிட்ட முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, கிடங்குகளில் இருந்து மதுபானங்களை விற்பது வரை, கணினிமயமாக்க அத்துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டார்.
அதன்படி, இதற்கான பணியை மத்திய அரசின் 'ரெயில்டெல்' என்ற நிறுவனத்திடம் டாஸ்மாக் நிர்வாகம் வழங்கியது; திட்டச்செலவு 294 கோடி ரூபாய்.
இந்நிறுவனம், கணினிமய கண்காணிப்பு மென்பொருள் உருவாக்கம், அனைத்து கடைகளுக்கும் கையடக்க 'ஸ்கேனர், பிரின்டர்' கருவிகள் வழங்கி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருங்கிணைப்பு பணிகளை பராமரிக்கும் வேலையை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, காஞ்சிபுரம் தெற்கு மற்றும் வடக்கு, திருவள்ளூர் மேற்கு, திருப்பூர், திருச்சி, சிவகங்கை, கரூர், விருதுநகர், திருநெல்வேலி, புதுக்கோட்டை உட்பட 15 மாவட்ட மதுக் கடைகளில் கணினிமய திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தை தன் வசதிக்காக கிழக்கு, மேற்காக டாஸ்மாக் நிர்வாகம் பிரித்துள்ளது. சென்னையை ஒட்டிய பகுதிகளான, எண்ணுார், கும்மிடிப்பூண்டி உள்ளிட்டவை கிழக்காக பிரிக்கப்பட்டு, இங்கு 185 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேற்கில் திருவள்ளூர் நகரம், திருத்தணி உள்ளடக்கிய பகுதிகளில் 124 மதுக்கடைகள் உள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் முதல், கிழக்கில் மட்டும் விற்பனை கணினிமயமாக்கப்பட்டுள்ளது. இங்கு மதுபாட்டில்களை ஸ்கேன் செய்யும் போதும், சில நேரங்களில் நெட்வொர்க் கனெக் ஷன் கிடைக்காதது போன்ற காரணங்களால், அடிக்கடி கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனால், விற்பனை நேரங்களில் ஊழியர்கள் அல்லல்படுவதாக வேதனை தெரிவித்தனர்.