/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
10 ஊராட்சி செயலர் பணியிடம் காலி; திருவாலங்காடு ஒன்றியத்தில் பாதிப்பு

ADDED : ஆக 02, 2024 07:11 AM
திருவாலங்காடு : திருவாலங்காடு ஒன்றியத்தில் காலியாக உள்ள 10 ஊராட்சி செயலர் பணியிடங்களை விரைவில் நிரப்ப கோரிக்கை எழுந்துள்ளது.
திருவாலங்காடு ஒன்றியத்தில், 42 ஊராட்சிகள் உள்ளன. இதில் அருங்குளம், அரும்பாக்கம், காஞ்சிப்பாடி, நல்லாட்டூர், எல்.வி.புரம், ஆற்காடு குப்பம் உட்பட, 10 ஊராட்சிகளில் செயலர் பணியிடம் காலியாக உள்ளது.
இதனால் கிராம ஊராட்சிகளில் வரி வசூல், குடிநீர், சுகாதாரம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஈமச்சடங்கு நிதி பெற்றுத்தருவது, ஊராட்சியில் இருந்து அரசுக்கு தேவையான புள்ளி விபரங்கள் சமர்ப்பித்தல்.
மாவட்ட நிர்வாகம் மூலம் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கொண்டு சேர்த்தல் உட்பட பல பணிகளை ஊராட்சி செயலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களால் அருகில் உள்ள செயலர் கூடுதலாக கவனிக்க வேண்டி உள்ளது.
கூடுதலாக கவனிப்பவர்கள் அலட்சியமாக செயல்படுவதாக மக்கள் புலம்புகின்றனர்.
இந்நிலையில் ஊராட்சி செயலர் பணியிடங்களை விரைந்து நிரப்ப, திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.