/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு '10 ஆண்டு'
/
பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு '10 ஆண்டு'
ADDED : மார் 31, 2024 11:21 PM
சென்னை: சைதாப்பேட்டை அருகே, 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு, 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, மாவட்ட 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை, சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 38. இவர், 2018 ஆக., 31ல், தான் வசிக்கும் அதே பகுதியில், வீட்டில் இருந்த 17 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கை, நீதிபதி ராஜலட்சுமி விசாரித்தார். போலீசார் தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ''குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், பிரகாஷுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்,'' என, தீர்ப்பளித்தார்.

