sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

1,000 ஆண்டு பழமையான பிச்சாலீஸ்வரர் கோவில் 30 ஆண்டாக சீரமைக்காததால் மாயமாகும் அவலம் அறநிலைய துறை அதிகாரிகள் பாராமுகம்

/

1,000 ஆண்டு பழமையான பிச்சாலீஸ்வரர் கோவில் 30 ஆண்டாக சீரமைக்காததால் மாயமாகும் அவலம் அறநிலைய துறை அதிகாரிகள் பாராமுகம்

1,000 ஆண்டு பழமையான பிச்சாலீஸ்வரர் கோவில் 30 ஆண்டாக சீரமைக்காததால் மாயமாகும் அவலம் அறநிலைய துறை அதிகாரிகள் பாராமுகம்

1,000 ஆண்டு பழமையான பிச்சாலீஸ்வரர் கோவில் 30 ஆண்டாக சீரமைக்காததால் மாயமாகும் அவலம் அறநிலைய துறை அதிகாரிகள் பாராமுகம்

1


ADDED : செப் 05, 2024 12:36 AM

Google News

ADDED : செப் 05, 2024 12:36 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ந்தஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, போந்தவாக்கம் கிராமத்தில் காமாட்சி அம்மன் உடனுறை பிச்சாலீஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்டது.

மூன்றடுக்கு கோபுரம் கொண்ட இக்கோவிலில், மூலவர் சிவபெருமான், காமாட்சியம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், நந்தி, பைரவர், நவக்கிரகம் ஆகிய தெய்வ சிலைகள் உள்ளன.

இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 50 ஆண்டுகளை கடந்து விட்டது. இக்கோவில் அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் கோவில் கோபுரம் மற்றும் கொடிமரம் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளது. அரசு சார்பில் ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது.

மேலும், பக்தர்கள் பங்களிப்புடன் பிரதோஷம், சிவராத்திரி விழா உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன. கோவிலுக்கு 3 ஏக்கர் நிலம் இருந்தது.

கிருஷ்ணா நதிநீர் கால்வாய் வெட்டும் பணிக்காக, 1 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. தற்போது, 2 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. 1,000 ஆண்டு பழமையான இக்கோவில் கோபுரம் சேதமடைந்துள்ளதை, அறநிலையத்துறை கண்டும், காணாமல் உள்ளது.

எனவே, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, போந்தவாக்கம் பிச்சாலீஸ்வரர் கோவில் கோபுரத்தை சீரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிப்பட்டு


பள்ளிப்பட்டு அருகே ஈச்சம்பாடி உள்ளது. ஈசனை பாடி என்ற பெயர் நாளடைவில், ஈச்சம்பாடி என மருவியதாக கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஈச்சம்பாடி கிராமத்தின் வடகிழக்கில் பழமையான சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பராமரிப்பு இல்லாததால், தற்போது பாழடைந்துள்ளது. கோவில் கட்டடம் மற்றும் மேல்தளத்தில் அதிகளவில் செடிகள் வளர்ந்துள்ளன.

இதன் காரணமாக, கோவில் கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், தெற்கில் உள்ள கல் மண்டப நுழைவாயிலும் சேதமடைந்து உள்ளது.

எனவே, ஈச்சம்பாடி சிவாலயத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us