/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் திருவிளக்கிற்கு 108 குங்கும அர்ச்சனை
/
பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் திருவிளக்கிற்கு 108 குங்கும அர்ச்சனை
பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் திருவிளக்கிற்கு 108 குங்கும அர்ச்சனை
பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் திருவிளக்கிற்கு 108 குங்கும அர்ச்சனை
ADDED : ஏப் 25, 2024 12:51 AM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது ஸ்ரீசர்வமங்களா சமேத ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வரர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் சிவபெருமான் நஞ்சுண்ட மயக்கத்தில் உருவ ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரதோஷ விழா கொண்டாட மூல காரணமான கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில், சித்திரை மாதம் பவுர்ணமி நாளில் நடைபெறும் திருவிளக்கு பூஜை பிரசித்தி பெற்றது. நேற்று முன்தினம் காலை, மூலவர் ஸ்ரீவால்மிகீஸ்வரர், அன்னை மரகதாம்பிகை மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. மாலை 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது.
பெண்கள் நீண்ட வரிசையில் குத்து விளக்கிற்கு குங்கும அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டி வழிபட்டனர். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அதேபோல், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமியை ஒட்டி, நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜை நடந்தது.