/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
16 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ நிலைய பணி சேத்துப்பட்டு ரயில் நிலையத்துடன் இணைப்பு
/
16 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ நிலைய பணி சேத்துப்பட்டு ரயில் நிலையத்துடன் இணைப்பு
16 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ நிலைய பணி சேத்துப்பட்டு ரயில் நிலையத்துடன் இணைப்பு
16 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ நிலைய பணி சேத்துப்பட்டு ரயில் நிலையத்துடன் இணைப்பு
ADDED : மே 19, 2024 05:15 AM

சென்னை: சேத்துப்பட்டு மின்சார ரயில் நிலையத்தின் அருகில், 16 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதையடுத்து, பயணியர் வசதிக்காக இரு நிலையங்களையும், இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டாவது கட்டமாக, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி; மாதவரம் - சோழிங்கநல்லுார்; மாதவரம் - சிப்காட் என, மூன்று வழித்தடங்களில், மொத்தம் 116 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
இதில், மாதவரம் - சிப்காட் வழித்தடத்தில் 45 கி.மீ., துாரத்தில், 50 நிலையங்கள் அமைய உள்ளன. இந்த தடத்தில், மூலக்கடை, பெரம்பூர், அயனாவரம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் சாலை, ஆயிரம்விளக்கு கிழக்கு, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தவெளி, அடையார், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், நாவலுார், சிறுசேரி ஆகிய பகுதிகள் இணைக்கப்படுகின்றன.
இதற்காக, சாலையோரம் தடுப்புகள் அமைத்து, ராட்சத இயந்திரங்கள் கொண்டு சுரங்கம் தோண்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சேத்துப்பட்டு மின்சார ரயில் நிலையத்துடன், மெட்ரோ ரயில் இணைய உள்ளதால், அங்கு சுரங்கம் தோண்டும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மாதவரம் - சிப்காட் வழித்தடத்தில் பெரம்பூர், சேத்துப்பட்டு மின்சார ரயில் நிலையங்களுடன், மெட்ரோ ரயில் நிலையங்கள் இணைக்கப்பட உள்ளன.
சேத்துப்பட்டில் 16 மீ., ஆழத்தில் 150 மீ., நீளம், 19 மீ., அகலத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி துவங்கி, முழு வீச்சில் நடக்கின்றன.
இங்கிருந்து சேத்துப்பட்டு மின்சார ரயில் நிலையத்திற்கு பயணியர் செல்லும் வகையில், பாதசாரிகள் பாதை, நடைமேம்பாலம் உள்ளிட்ட கட்டமைப்பு மேற்கொள்ளப்படும். இந்த தடத்தில், மெட்ரோ ரயில் பணிகள் 2027ல் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

