sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாவட்டத்தில் தெரு நாய் கடிக்கு ஆளானோர்... 18,000 பேர் உள்ளாட்சி அமைப்புகள் உறக்கம், மக்கள் அச்சம்

/

மாவட்டத்தில் தெரு நாய் கடிக்கு ஆளானோர்... 18,000 பேர் உள்ளாட்சி அமைப்புகள் உறக்கம், மக்கள் அச்சம்

மாவட்டத்தில் தெரு நாய் கடிக்கு ஆளானோர்... 18,000 பேர் உள்ளாட்சி அமைப்புகள் உறக்கம், மக்கள் அச்சம்

மாவட்டத்தில் தெரு நாய் கடிக்கு ஆளானோர்... 18,000 பேர் உள்ளாட்சி அமைப்புகள் உறக்கம், மக்கள் அச்சம்


ADDED : மார் 10, 2025 11:50 PM

Google News

ADDED : மார் 10, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டத்தில் தெரு நாய் கடியால், ஓராண்டில், 18,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கருத்தடை செய்து எண்ணிக்கையை குறைக்க, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்காததால், தெருநாய் கடிக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி உட்பட ஆறு நகராட்சிகள், திருமழிசை, பள்ளிப்பட்டு உட்பட ஒன்பது பேரூராட்சிகள், திருவாலங்காடு, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் உட்பட 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன.

இப்பகுதிகளில், ஒரு லட்சத்து 15,000க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. முந்தைய காலங்களில் தெருநாய்கள் கொல்லப்பட்டன. 'ப்ளு கிராஸ்' மற்றும் விலங்கு ஆர்வலர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

அதற்கு மாறாக, இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை செய்யப்படுகிறது. இதற்கான செலவினத்தை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்றுக் கொள்கின்றன.

ஆனாலும், போதிய நிதியில்லாமல், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்வதில்லை. இதனால், இனப்பெருக்கம் அதிகரித்து, தெரு சாலைகள் முதல் நெடுஞ்சாலைகள் வரை கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.

ஒரு நாய்க்கு கருத்தடை சிகிச்சை செய்ய, 1,650 ரூபாய் வரை உள்ளாட்சி அமைப்பால் செலவிடப்படுகிறது. அதன்படி கணக்கிட்டால், திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய, 18 கோடியே, 97 லட்சத்து, 50,000 ரூபாய் செலவிட வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டுமே, இவ்வளவு பெரிய தொகை செலவிட வேண்டி உள்ளதால், சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை கணக்கிட்டால், அதற்கான செலவினங்கள் அதிகரிக்கும்.

இந்நிலையில், தெருநாய்கள் கடித்து சிகிச்சைக்கு வருவோர் பட்டியலை பார்த்தால் மிரள வைக்கிறது. கடந்தாண்டு மார்ச் முதல் நடப்பாண்டு பிப்ரவரி வரை திருவள்ளூர், திருத்தணி பொன்னேரி அரசு மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், 18,124 பேர் நாய் கடிக்கு சிகிச்சை பெற்றனர்.

இதில், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகம். இதுமட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை தெரியவில்லை.

தெருநாய் கூட்டத்தில் வெறி நாய் மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்கள் காணப்படுகின்றன. இவை கடித்தால், 'ரேபிஸ்' பாதிப்பு ஏற்படுகிறது. இந்நோய் பாதித்தால், உயிரிழப்பு நிச்சயம் என்ற சூழலே தற்போது வரை நீடிக்கிறது.

தெருநாய் பிரச்னை தானே என, அரசு அலட்சியமாக கடந்து செல்லாமல், வெறிநாய் கடித்து 'ரேபிஸ்' நோய் பாதிப்புக்குள்ளாகி, கோவை மாநகரில் மட்டும் கடந்தாண்டில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், மூன்றாண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளால் நாய்கடி தொடர்பாக விழிப்புணர்வோ, பிரசாரமோ நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளூகிராஸ் உடன் இணைந்து

நடவடிக்கை எடுக்க வேண்டும்தெருநாய்களின் உயிரை பாதுகாப்பதை விட, மக்களின் பாதுகாப்பு முக்கியம். இவ்விஷயத்தில் தமிழக அரசு கூடுதல் அக்கறை செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருநாய்களை பிடித்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் விடலாம். நாய்களுக்கு என, வனம் அமைத்து பராமரிக்கலாம். நாய் கடித்தால் செலவாகும் தொகையை, அதற்கு பயன்படுத்தினால் நாய்களும் பாதுகாப்பாக இருக்கும், மக்களும் நிம்மதியடைவர். நாய் தொல்லை காரணமாக, சிலர் அதை கொன்று விடுகின்றனர். பின், பிரச்னைகளில் சிக்கி சிரமப்படுகின்றனர். 'ப்ளு கிராஸ்' அமைப்பு மற்றும் விலங்குகள் ஆர்வலர்கள், தமிழக அரசுடன் இணைந்து தீர்வு காண வேண்டும்.- எஸ்.நாகராஜ் 42,சமூக ஆர்வலர்,திருவாலங்காடு.



200 கால்நடைகள் உயிரிழப்பு

திருவாலங்காடு வட்டாரத்தில், 20 - 30 தெரு நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவதோடு, மக்கள் மட்டுமன்றி, ஆடு, மாடு, கோழிகளையும் கடிக்கின்றன. இரவு நேரங்களில், தோட்டத்திற்குள் புகும் நாய்கள், 20க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து கொன்றுள்ளன. அதேபோல், மாடுகள், கன்றுக்குட்டிகள் மற்றும் கோழிப்பண்ணைகளுக்குள் புகுந்து, நுாற்றுக்கணக்கான கோழிகளையும் கடித்து கொன்றுள்ளன. மூன்று மாதத்தில் மட்டும், 200க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் நாய் கடிக்கு பலியாகியுள்ளன. கோழிப்பண்ணைகளில் வளர்ந்த நுாற்றுக்கணக்கான கோழிகளும் இரையாகியுள்ளன.



உணவு, தண்ணீர் கிடைத்தால் கடிக்காது

நாய்களுக்கு சாப்பாடு, தண்ணீர் கிடைக்காததால், ஆக்ரோஷம் அடைந்து மனிதர்களை கடிக்கிறது. அதற்கு உணவும், மனிதர்களால் தொல்லையும் கொடுக்காமல் இருந்தால் எதுவும் செய்யாது. நோய்வாய்ப்பட்ட சில நாய்கள் கடிக்க வரலாம். நாய்களுக்கு உணவு, தண்ணீர் கிடைக்கக்கூடிய பகுதிகளில், கடித்ததாக தகவல் இல்லை. இனப்பெருக்க காலங்களில் ஆண் நாய்களுக்கு இணை கிடைக்காமல் ஆக்ரோஷமாக இருக்கும்.- ஆர்.பிரபாகரன்,விலங்குகள் நல செயல்பாட்டாளர்,திருவள்ளூர்.



நாய் கடிக்கும், பருவமாற்றத்துக்கும் சம்பந்தமில்லை. தெரு நாய் கடித்தால், 'ரேபிஸ்' தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும். முதல் நாள், மூன்றாவது நாள், 14வது நாள், 28வது நாள், 90வது நாள் என, ஒவ்வொருவரும் ஐந்து முறை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 90வது நாள் செலுத்திக் கொண்டால், ஓராண்டுக்கு பாதுகாப்பானது.

கால்நடை மருத்துவர்,திருவள்ளூர்.








      Dinamalar
      Follow us