/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் லாரிக்கு ரூ.25,000 அபராதம்
/
கழிவுநீர் லாரிக்கு ரூ.25,000 அபராதம்
ADDED : ஏப் 28, 2024 06:42 AM
சோழிங்கநல்லுார் : விரிவாக்க பகுதியான சோழிங்கநல்லுார், பெருங்குடி மண்டலங்களில், கழிவுநீர் இணைப்பு முழுமை பெறவில்லை. இதனால், கழிவுநீர் லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
கழிவுநீரை கொட்ட, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லுார் ஆகிய இடங்களில், கழிவுநீர் நிலையங்கள் உள்ளன.
இருந்தும் லாரி உரிமையாளர்கள் சிலர், கழிவுநீரை பகிங்ஹாம் கால்வாய், ஒக்கியம்மடு மற்றும் காலி இடங்களில் கொட்டுகின்றனர். இதை தடுக்க, குடிநீர் வாரியம் கண்காணித்து வருகிறது.
நேற்றுமுன்தினம், காரப்பாக்கம், ஒக்கியம்மடு அருகில் கழிவுநீர் கொட்டிய லாரியை, குடிநீர் வாரிய அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். விசாரணையில், பாலாஜி டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் நடத்தும் லாரி என தெரிந்தது. இதையடுத்து, லாரி உரிமையாளர் பரமேஸ்வரிக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

