/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் 2ம் கட்டமாக மக்களுடன் முதல்வர் முகாம்
/
திருவள்ளூரில் 2ம் கட்டமாக மக்களுடன் முதல்வர் முகாம்
திருவள்ளூரில் 2ம் கட்டமாக மக்களுடன் முதல்வர் முகாம்
திருவள்ளூரில் 2ம் கட்டமாக மக்களுடன் முதல்வர் முகாம்
ADDED : ஜூன் 28, 2024 11:00 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 14 ஒன்றியங்களிலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், 78 இடங்களில் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் 2ம் கட்டமாக செயல்படுத்துவது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் முதற்கட்டமாக ஜன.3-23 வரை நகர்ப்புற பகுதிகளில் நடத்தப்பட்டு 5,055 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன. 2ம் கட்டமாக, ஜூலை-15- செப்.15 வரை, ஊரகப் பகுதிகளில் முகாம் நடக்கஉள்ளது.
மாவட்டத்தில் உள்ள 14 வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் இம்முகாம் நடத்தப்பட வேண்டும். ஊரகப் பகுதிகளில் மூன்று கட்டமாக, 78 முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
மொத்தம் 58 சேவைகளுக்கான முகாமில், பெறப்படும் மனுக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, ஏழு கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்.
முகாமில் குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கூடுதல் கலெக்டர்-வளர்ச்சி, சுகபுத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.