/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதைப்பாக்கு பறிமுதல் 3 பேர் கைது
/
போதைப்பாக்கு பறிமுதல் 3 பேர் கைது
ADDED : மே 30, 2024 10:34 PM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி கம்மவார்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் மணவாளநகர் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் பொன்ராஜ், 58 என்பவரது கடையில் சோதனை மேற்கொண்டபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பாக்குகள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதில் அவரது கடையில் இருந்து 4 ஆயிரம் மதிப்புள்ள 160 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்து பொன்ராஜை கைது செய்தனர்.
இதேபோல் மப்பேடு போலீசார் நேற்று முன்தினம் பேரம்பாக்கத்தில் ராஜேந்திரன், 50 என்பவரது பெட்டி கடையில் 200 ரூபாய் மதிப்புள்ள ஒரு ஹான்ஸ், 40 விமல் போதைப்பாக்குகளை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.
ராஜேந்திரனை கைது செய்த மப்பேடு போலீசார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
மப்பேடு அடுத்த மேட்டுமாநகரில் பவானி, 50 என்பவரது கடையில் நேற்று முன்தினம் 700 கிராம் எடை கொண்ட 1,200 ரூபாய் மதிப்புள்ள ஹான்ஸ், விமல் போன்ற போதைப்பாக்குகளை பறிமுதல் செய்த மப்பேடு போலீசார் கடைக்கு சீல் வைத்தனர்.
போலீசார் பவானியை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.