/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓட்டு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 கி.மீ., துாரம் 'ட்ரோன்' பறக்க தடை
/
ஓட்டு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 கி.மீ., துாரம் 'ட்ரோன்' பறக்க தடை
ஓட்டு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 கி.மீ., துாரம் 'ட்ரோன்' பறக்க தடை
ஓட்டு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 கி.மீ., துாரம் 'ட்ரோன்' பறக்க தடை
ADDED : மே 03, 2024 01:22 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தைச் சுற்றி, 3 கி.மீ., துாரம் 'ட்ரோன்' பறக்க கலெக்டர் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் கடந்த 19ல் நடந்து முடிந்தது. திருவள்ளூர் தொகுதியில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், பெருமாள்பட்டு ஸ்ரீராம் வித்யா மந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இங்கு, 24 மணி நேரமும், நான்கு அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு, ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் நேற்று ஓட்டு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு பணி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பினை மேலும் பலப்படுத்தும் நோக்கில் பெருமாள்பட்டு ஸ்ரீராம் வித்யா மந்திர் பள்ளியில் இருந்து, 3 கி.மீ., சுற்றளவிற்கு ஆளில்லா தானியங்கி வானுர்தி - ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.