/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.2.20 லட்சம் மதிப்புள்ள 32 கிலோ குட்கா பறிமுதல்
/
ரூ.2.20 லட்சம் மதிப்புள்ள 32 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : ஆக 31, 2024 11:07 PM
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடைகளில் நேற்று சோதனை செய்தனர்.
கூர்மவிலாசபுரத்தில் இருந்து அத்திப்பட்டு செல்லும் சாலையில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான கடையில் தடை செய்யப்பட்ட 32 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 2.20 லட்சம் ரூபாயாகும். கடை உரிமையாளருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்து கடைக்கு 'சீல்' வைத்தனர். சுப்பிரமணியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
l மப்பேடு போலீசார் கீழச்சேரி பகுதியில் உள்ள கடைகளில் போதை பொருள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், திடீர் சோதனையிட்டனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த, ஜோசப்ராஜ், 46, என்பவரது கடைக்குள் மறைத்து வைத்திருந்த, ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருள் பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, ஜோசப்ராஜ் மீது போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.