/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,332 வழக்குகளுக்கு தீர்வு
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,332 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,332 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,332 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : செப் 14, 2024 09:45 PM
திருவள்ளூர்:திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அளித்த உத்தரவின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் - லோக் அதாலத் நடந்தது.
முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஜூலியட்ஸ் புஷ்பா வழிகாட்டுதலின்படி நடந்த நிகழ்வில், திருவள்ளூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 6 ஆயிரத்து 600 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு, 3 ஆயிரத்து 37 வழக்குகள் முடிக்கப்பட்டு, 13 கோடியே 59 லட்சத்து 58 ஆயிரத்து 290 ரூபாய்கு தீர்வு காணப்பட்டது.
நிலுவையில் அல்லாத 295 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு, 295 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூபாய் 4 கோடியே 13 லட்சத்து 22 ஆயிரத்து 551 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் முழுதும் மொத்தம் 6 ஆயிரத்து 895 வழக்குகள் சமரசத் தீர்வுக்கு எடுக்கப்பட்டு அவற்றில், 3 ஆயிரத்து 332 வழக்குகள் முடிக்கப்பட்டு 17 கோடியே 72 லட்சத்து 80 ஆயிரத்து 841 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
அதேபோல பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூர், திருவெற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் தாலுகா நீதிமன்றங்களிலும் நடைபெற்றது. மாவட்டம் முழுதும் மொத்தம் 25 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.