/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காய்கறி வளர்ப்பு திட்டத்தில் தோ.க.துறையில் 340 பேர் பயன்
/
காய்கறி வளர்ப்பு திட்டத்தில் தோ.க.துறையில் 340 பேர் பயன்
காய்கறி வளர்ப்பு திட்டத்தில் தோ.க.துறையில் 340 பேர் பயன்
காய்கறி வளர்ப்பு திட்டத்தில் தோ.க.துறையில் 340 பேர் பயன்
ADDED : ஆக 24, 2024 09:57 PM
திருவள்ளூர்:காய்கறி வளர்ப்பு திட்டத்தில், 340 பேர் பயனடைந்துள்ளனர்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில், தோட்டக்கலை துறை மூலம் நடப்பு நிதியாண்டில், நகர்புற வட்டாரங்களில் ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்தி தினசரி காய்கறி தேவையினை பூர்த்தி செய்யும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.
இதற்காக, அம்பத்தார், பூந்தமல்லி, புழல் மற்றும் மீஞ்சூர் வட்டாரங்களில், ஆயிரம் பேருக்கு காய்கறி பயிரிட இலக்க நிர்ணயம் செய்யப்பட்டது. இதுவரை, செடி வளர்ப்பு பைகள் 6, தென்னை நார் கட்டி 12, ஆறு வகையான காய்கறி விதை மற்றும் உயிர் உரங்கள் அடங்கிய மாடித்தோட்ட தளைகள் ஆகியவை, 340 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் நிழல் வலை குடில் அமைப்பதற்கு 8,500 ச.மீட்டரில் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 3.12 லட்சம் ரூபாயில், 585 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

