/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கதவை உடைத்து ரூ.35,000 திருட்டு
/
கதவை உடைத்து ரூ.35,000 திருட்டு
ADDED : ஆக 13, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீஞ்சூர்: மீஞ்சூர் அடுத்த சாணார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி வள்ளி, 45. நேற்று காலை, இவரது கணவர் வெல்டிங் வேலைக்கு சென்றார்.
இவரும், வீட்டை பூட்டிக்கொண்டு, நுாறுநாள் பணிக்கு சென்று விட்டு, பிற்பகல், 2:30 மணிக்கு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த, 35,000 ரூபாய் திருடப்பட்டிருப்பது தெரிந்தது.
இது குறித்து வள்ளி, கொடுத்த புகாரின்படி போலீசார் விசாரித்து, வருகின்றனர்.

