/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி தொகுதிக்கு 373 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
/
பொன்னேரி தொகுதிக்கு 373 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
ADDED : மார் 25, 2024 06:20 AM
பொன்னேரி: திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரி சட்டசபை தொகுதியில், 311 ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த மையங்களுக்கான ஒட்டுப்பதிவு, விவிபேட் உள்ளிட்ட மின்னணு இயந்திரங்கள் நேற்று திருவள்ளூரில் இருந்து பொன்னேரிக்கு கொண்டு வரப்பட்டன.
பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர்., மீன்வளக் கல்லுாரியில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள, இரண்டு 'ஸ்ட்ராங் ரூமில்' இவை பாதுகாப்பாக போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. பொன்னேரி சப்-கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த், தாசில்தார் மதிவாணன் மற்றும் அதிகாரிகள் நேரடி மேற்பார்வையிலும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையிலும் இவை ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
பொன்னேரி சட்டசபைக்கு என, 373 ஓட்டும்பதிவு இயந்திரங்கள், 373 கட்டுப்பாட்டு இயந்திரம், 404 வி.வி.பேட் கொண்டு வரப்பட்டு உள்ளன.
ஸ்ட்ராங் ரூமை சுற்றிலும் சிசிடிவி.,க்கள், நுழைவு வாயிலில், 24மணிநேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளன.

