ADDED : ஏப் 22, 2024 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் மேல்நல்லாத்துார் பகுதியில் போதைப்பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் திருவள்ளூர் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ராஜ்குமார், 42 என்பவரது கடையில் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு 138 ஹான்ஸ், 66 கூல் லிப், 240 விமல், 100 மிக்ஸ்டு ஹான்ஸ் என மொத்தம் 779 போதைப்பாக்குகளை பறிமுதல் செய்தனர். 5 கிலோ எடையுள்ள இவற்றின் மதிப்பு 12,000 ஆகும்.
போலீசார் வழக்கு பதிந்து ராஜ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

