/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தனியார் தொழிற்சாலையில் திருடிய 5 பேர் கைது
/
தனியார் தொழிற்சாலையில் திருடிய 5 பேர் கைது
ADDED : ஆக 19, 2024 11:05 PM
சோழவரம்: சோழவரம் அடுத்த அத்திப்பேடு கிராமத்தில், மின்சார பொருட்கள், வாகனங்களுக்கு உதிரி பாகங்களை இரும்பு மற்றும் அலுமினியத்தில் 'மோல்டிங்' முறையில் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
அவ்வப்போது இங்குள்ள அலுமினிய கழிவுகள் திருடுபோவது தொழிற்சாலை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அவர்கள் அங்குள்ள ' சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், அங்கு பணிபுரியும் உள்ளூர் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் ஐந்து பேர், நான்கு மாதங்களில், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அலுமினிய கழிவு பொருட்களை திருடி சென்றது தெரிந்தது.
அதையடுத்து தொழிற்சாலையின் பாதுகாப்பு மேலாளர் ராஜகுரு, சோழவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
வழக்கு பதிந்த போலீசார் உத்திரபிரதேசம் மாநிலம் நகினா, 25, மஞ்ஜேஷ், 25, அர்மன், 20, பொன்னேரி எல்.எஸ். பூதாரை சேர்ந்த செல்வம், 30, பெரவள்ளூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன், 30 ஆகியோரை கைது செய்தனர்.

