/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டூ - வீலர் திருடிய 5 பேர் கைது: 18 வாகனங்கள் மீட்பு
/
டூ - வீலர் திருடிய 5 பேர் கைது: 18 வாகனங்கள் மீட்பு
டூ - வீலர் திருடிய 5 பேர் கைது: 18 வாகனங்கள் மீட்பு
டூ - வீலர் திருடிய 5 பேர் கைது: 18 வாகனங்கள் மீட்பு
ADDED : ஜூன் 07, 2024 02:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக பதியப்பட்ட வழக்குகளில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய எஸ்.பி., சீனிவாச பெருமாள் உத்தரவில், திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர்கள் தர்மலிங்கம், குமார் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த சூர்யா, 23, சிவராசன், 19, ஆகாஷ், 22, ஆறுமுகம், 24, அன்பரசு, 23, ஆகிய ஐந்து பேரை நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து பதிவு எண் நீக்கப்பட்ட, 18 இருசக்கர வாகனங்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.