/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
50 கிராம் தாய்ப்பால் பவுடர் ரூ.10,000 வனப்பகுதியினரை பயன்படுத்திய புரோக்கர்கள்
/
50 கிராம் தாய்ப்பால் பவுடர் ரூ.10,000 வனப்பகுதியினரை பயன்படுத்திய புரோக்கர்கள்
50 கிராம் தாய்ப்பால் பவுடர் ரூ.10,000 வனப்பகுதியினரை பயன்படுத்திய புரோக்கர்கள்
50 கிராம் தாய்ப்பால் பவுடர் ரூ.10,000 வனப்பகுதியினரை பயன்படுத்திய புரோக்கர்கள்
ADDED : ஜூன் 06, 2024 06:14 AM
சென்னை, : தமிழக - கர்நாடக வனப்பகுதி தாய்மார்களிடம் பெறப்படும், தாய்ப்பால் பதப்படுத்தப்பட்டு பவுடராக்கி, 50 கிராம் பவுடர் 10,000 ரூபாய் வரை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் வணிக ரீதியாக தாய்ப்பால் விற்பனை செய்வதற்கு தடை உள்ளது. இதனால், கர்நாடகாவில் தாய்ப்பாலை பதப்படுத்தி, வணிக ரீதியாக விற்பனை செய்து வந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே, சென்னை, மாதவரத்தில் தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து, பதப்படுத்தி வைக்கப்பட்ட தாய்ப்பால் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, சென்னை அரும்பாக்கம், சேத்துப்பட்டு பகுதியிலும், வினியோகிஸ்தர் கிடங்கில் இருந்த தாய்ப்பால் பாட்டில்கள், பவுடர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவை, தமிழகத்தில் பல்வேறு தனியார் மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் அதன் அருகாமை மருந்தகங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
இதனால், சட்டவிரோத தாய்ப்பால் விற்பனையை தடுக்க, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாநிலம் முழுதும் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:
சட்டவிரோத தாய்ப்பால் விற்பனை குறித்து மகப்பேறு மருத்துவமனைகளை கண்காணித்த போது, பல மருத்துவமனைகள், மருந்தகங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
50 மி.லி., பால் மற்றும் 5 கிராம் கொண்ட 10 பாக்கெட் பவுடர் ஆகியவை, 10,000 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து வருகின்றனர்.
இடைத்தரகர்கள் வாயிலாக, தமிழக - கர்நாடக எல்லை பகுதி மக்கள் மற்றும் வனப்பகுதியில் உள்ள தாய்மார்களிடம் தாய்ப்பாலை, குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றை பதப்படுத்தி மற்றும் பவுடராக்கி நகர பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பலருக்கு தொடர்பு இருப்பதால், போலீசாருடன் இணைந்து, உணவு பாதுகாப்பு துறையும், சட்டவிரோத தாய்ப்பால் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.