/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி, மீஞ்சூரில் 56 மதுபாட்டில்கள் பறிமுதல்
/
பொன்னேரி, மீஞ்சூரில் 56 மதுபாட்டில்கள் பறிமுதல்
ADDED : ஏப் 12, 2024 08:43 PM
பொன்னேரி:திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரி சட்டசபைதொகுதியில், தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் நேற்று அதிகாலை, பொன்னேரி என்.ஜி.நகர் மற்றும், பழைய பேருந்து நிலையம் பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பகுதியில், இருவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிந்தது.
அவர்கள் இருவரையும் பிடித்து, அவர்களிடம் இருந்த, 6,610 ரூபாய் மதிப்புள்ள, 47 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பொன்னேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்து, மதுபானங்களையும், அவற்றை விற்பனை செய்தவர்களையும் ஒப்படைத்தனர்.
மீஞ்சூர் அடுத்த நாப்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பில் இருந்தனர்.
அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்களை பிடிக்க முயலும் போது, அவர்கள் தப்பியோடினர். அங்கிருந்த, 1,380 ரூபாய் மதிப்புள்ள, 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, மணலி புதுநகர் போலீசில் ஒப்படைத்தனர்.

