/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாடகை பாக்கி 77 கடைகளுக்கு 'சீல்'
/
வாடகை பாக்கி 77 கடைகளுக்கு 'சீல்'
ADDED : ஜூலை 27, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,: கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.
அவற்றில் கடை நடத்தி வருவோர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை தொகையை செலுத்தாமல் அலைக்கழித்து வந்துள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று, பனகல் பூங்காவில் 27 கடைகள், கே.கே.நகரில் 50 கடைகள் என, மொத்தம் 77 கடைகளுக்கு மாநகராட்சி வருவாய் துறையினர் நேற்று, 'சீல்' வைத்தனர்.