/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொடர் குற்றங்களால் வாகன தணிக்கை 816 வழக்குகள் பதிவு
/
தொடர் குற்றங்களால் வாகன தணிக்கை 816 வழக்குகள் பதிவு
தொடர் குற்றங்களால் வாகன தணிக்கை 816 வழக்குகள் பதிவு
தொடர் குற்றங்களால் வாகன தணிக்கை 816 வழக்குகள் பதிவு
ADDED : ஏப் 29, 2024 11:16 PM
ஆவடி அடுத்த மிட்டனமல்லி இரட்டை கொலை சம்பவத்தை தொடர்ந்து, நேற்று முன்தினம்இரவு, ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவின்படி,போலீசார் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஆவடி காவல் எல்லைக்குட்பட்ட 19 இடங்களில், 2,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன.
இதில், மது அருந்தி வாகனம் ஓட்டிய 42 பேர், அபாயகரமாக வாகனத்தை ஓட்டிய 58 பேர், அதிவேகமாக வாகனம் ஒட்டிய 61 பேர். இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் பயணித்த 43 வாகன ஓட்டிகள், விதி மீறிய நம்பர் பிளேட் உடன் பயணித்த 176 வாகன ஓட்டிகள் உட்பட 816 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், ரவுடி பின்னணியை உடையவர்கள் யாரும் சிக்கவில்லை.