/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
100 நாள் வேலை திட்டத்தில் 934 பண்ணை குட்டை பணி
/
100 நாள் வேலை திட்டத்தில் 934 பண்ணை குட்டை பணி
ADDED : ஆக 29, 2024 02:24 AM

திருவள்ளூர்:ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நுாறு நாள் வேலை திட்டத்தில், மாவட்டம் முழுதும் 934 பண்ணை குட்டை அமைக்கும் பணி நடப்பதாக, கலெக்டர் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியம் அலமாதியில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மஹாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ், பண்ணை குட்டை பணி நடப்பதை கலெக்டர் பிரபுசங்கர் நேற்று முன்தினம் பார்வையிட்டார்.
அதன்பின் அவர் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், மாவட்டம் முழுதும் பண்ணை குட்டை அமைக்கப்பட்டு வருகிறது.
எல்லாபுரம் ஒன்றியம் - 126, கும்மிடிபூண்டி - 152, கடம்பத்துார் - 61, மீஞ்சூர் - 152, பள்ளிப்பட்டு - 36, பூந்தமல்லி - 12, பூண்டி - 99, ஆர்.கே.பேட்டை - 78, சோழவரம் - 80, திருத்தணி - 86, திருவாலங்காடு - 52, திருவள்ளூர் - 41, வில்லிவாக்கம் - 8 என, மொத்தம் 934 பண்ணை குட்டை பணி நடைபெற்று வருகிறது.
இந்த பண்ணை குட்டை அமைப்பதன் வாயிலாக, நிலத்தடி நீர்மட்டம் உயரும். பண்ணை குட்டைகளில், மீன் குஞ்சு வளர்த்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செந்தில்குமார், ஊராட்சி உதவி இயக்குனர் பரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

