/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட சிறுமியை கடித்து குதறிய நாய்
/
பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட சிறுமியை கடித்து குதறிய நாய்
பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட சிறுமியை கடித்து குதறிய நாய்
பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட சிறுமியை கடித்து குதறிய நாய்
ADDED : செப் 06, 2024 12:18 AM

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி மகள் நித்யஸ்ரீ, 8. அதே பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவி பள்ளியில் வழங்கிய மதிய உணவு வாங்கிக் கொண்டு பள்ளி வளாகத்தில் அமர்ந்து சக மாணவர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது பள்ளி வளாகத்தில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த தெரு நாய்கள், திடீரென மாணவி நித்யஸ்ரீயை கடித்துக் குதறியது. அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவியை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்திலேயே நாய்கள் சுற்றித்திரிவது குறித்து பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.