/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஸ்ரீகாளிகாபுரத்தில் பழுதடைந்த கட்டடத்தில் இயங்கும் நுாலகம்
/
ஸ்ரீகாளிகாபுரத்தில் பழுதடைந்த கட்டடத்தில் இயங்கும் நுாலகம்
ஸ்ரீகாளிகாபுரத்தில் பழுதடைந்த கட்டடத்தில் இயங்கும் நுாலகம்
ஸ்ரீகாளிகாபுரத்தில் பழுதடைந்த கட்டடத்தில் இயங்கும் நுாலகம்
ADDED : ஆக 21, 2024 12:00 AM

ஆர்கே பேட்டை:ஆர்கே பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரத்தில், 15 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் மேற்கில் செல்லாத்தம்மன் கோவில் அருகே, கிளை நுாலகம் செயல்பட்டு வருகிறது.
குறுகலான கட்டடத்தில் செயல்பட்டு வரும் இந்த நுாலகத்தில் வாசகர்கள் அமர்ந்து படிக்க போதிய இட வசதி இல்லை.
புத்தகங்களை பாதுகாக்கவும் முடிவதில்லை. மழை நீர் ஒழுகும் நிலையில் கட்டடம் இருந்து வருகிறது. கட்டடத்தை சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் புழு, பூச்சிகளின் தொல்லையும் உள்ளது.
இதனால் வாசகர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கிராமத்தின் கிழக்கில் அரசு படிப்பகம் ஒன்று பாழடைந்து வரும் நிலையில், செயல்பட்டு வரும் நுாலக கட்டடமும் போதிய அடிப்படை வசதிகள் இன்றி கிடப்பதால் வாசகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஸ்ரீ காளிகாபுரத்தில் முழுநேர நுாலக கட்டடம் புதிதாக கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.