/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூட்டியே கிடக்கும் கழிப்பறை ரூ.32 லட்சம் வரிப்பணம் வீண்
/
பூட்டியே கிடக்கும் கழிப்பறை ரூ.32 லட்சம் வரிப்பணம் வீண்
பூட்டியே கிடக்கும் கழிப்பறை ரூ.32 லட்சம் வரிப்பணம் வீண்
பூட்டியே கிடக்கும் கழிப்பறை ரூ.32 லட்சம் வரிப்பணம் வீண்
ADDED : மார் 09, 2025 03:05 AM

திருத்தணி: திருத்தணி நகராட்சி மேல்திருத்தணி நல்லாங்குளம் அருகே, நகராட்சி நிர்வாகம் சார்பில், 2022 - 23ம் ஆண்டு 'துாய்மை இந்தியா 2.0' திட்டத்தின் கீழ், 32.20 லட்சம் ரூபாய் மதிப்பில் பொது கழிப்பறை, ஆறு மாதங்களுக்கு முன் கட்டப்பட்டது.
இங்கு, ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என, மொத்தம் எட்டு கழிப்பறைகள் நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த கழிப்பறை முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் நல்லாங்குளம் பகுதிவாசிகள் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டன.
இந்த கழிப்பறை கட்டி முடித்து பல மாதங்களான நிலையில், தற்போது வரை பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டியே உள்ளது. இதனால், மத்திய அரசின் பணம் வீணாகிறது. மேலும் கழிப்பறை கட்டடமும் பராமரிப்பின்றி வீணாகும் அபாயம் உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பொது கழிப்பறை கட்டடத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.