/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின் கம்பியில் உரசி தீக்கிரை
/
வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின் கம்பியில் உரசி தீக்கிரை
வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின் கம்பியில் உரசி தீக்கிரை
வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின் கம்பியில் உரசி தீக்கிரை
ADDED : மே 29, 2024 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி:பட்டாபிராம், தண்டரை, விக்னேஷ் நகர் வழியாக, வைக்கோல் ஏற்றி தண்டரை நோக்கி லாரி சென்றது. லாரியை, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சரவணன், 40, என்பவர் ஓட்டி சென்றார்.
நேற்று முற்பகல் 11:50 மணிக்கு தண்டரை அருகே, மேலே சென்ற மின்கம்பி மீது வைக்கோல் உரசியதில், தீப்பற்றி எரிய துவங்கியது.
அதிர்ச்சியடைந்த சரவணன், கீழே இறங்கி தீயை அணைக்க முயற்சித்தார். அதற்குள், மளமளவென தீ கொழுந்து விட்டு எரிந்தது.
தகவலறிந்த ஆவடி தீயணைப்பு துறையினர், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் லாரி முழுதும் தீக்கிரையானது. பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.