/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பின்றி வறண்டு கிடக்கும் கால்நடை தண்ணீர் தொட்டி
/
பராமரிப்பின்றி வறண்டு கிடக்கும் கால்நடை தண்ணீர் தொட்டி
பராமரிப்பின்றி வறண்டு கிடக்கும் கால்நடை தண்ணீர் தொட்டி
பராமரிப்பின்றி வறண்டு கிடக்கும் கால்நடை தண்ணீர் தொட்டி
ADDED : மார் 08, 2025 01:28 AM

கும்மிடிப்பூண்டி:கோடை காலங்களில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் தண்ணீர் பருக வேண்டும் என்பதற்காக, கிராம பகுதிகளில், கால்நடை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இதை, அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் பராமரித்து வருகின்றன.
கும்மிடிப்பூண்டி அருகே ஏடூர் கிராமத்தில், சாலையோரம் கால்நடை குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க தவறியதால் தொட்டி சேதமடைந்து, தண்ணீரின்றி காணப்படுகிறது.
கோடை காலத்தில் கால்நடைகளுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல், வறட்சியால் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏடூர் கிராமம் மட்டுன்றி, கால்நடை குடிநீர் தொட்டிகள் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தொட்டிகளை முறையாக பராமரித்து, எப்போதும் தண்ணீர் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.