/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையின் நடுவில் மின்கம்பம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
சாலையின் நடுவில் மின்கம்பம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
சாலையின் நடுவில் மின்கம்பம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
சாலையின் நடுவில் மின்கம்பம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : ஏப் 03, 2024 01:20 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து ஜனப்பன்சத்திரம் செல்லும் சாலையில் சிறுவாக்கம் கிராமம் அருகே மின்கம்பம் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
சமீபத்தில் இந்த சாலை விரிவுபடுத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட நிலையில், மின்கம்பத்தை, சாலையோர பகுதிக்கு மாற்றம் செய்யாமல், அப்படியே போடப்பட்டு உள்ளது.
சாலையின் நடுவில் மின்கம்பம் இருப்பதால், ஜனப்பன்சத்திரம் நோக்கி பயணிக்கும் வாகனங்கள் தடுமாற்றத்துடன் செல்கின்றன.
மின்கம்பம் இருக்கும் பகுதியை கடக்கும்போது, சாலையின் வலதுபுறமாக செல்ல வேண்டி உள்ளது.
அதேசமயம் எதிரில் வரும் வாகன ஓட்டிகளும் தடம் மாறி, சாலையோரத்திற்கு சென்று சிரமங்களை சந்திக்கின்றனர்.
சாலை அமைக்கும்போது சரியான திட்டமிடல் இல்லாமல், மின்கம்பத்தை சுற்றி, தார் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. மின்வாரியம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

