/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிற்சாலையை கண்டித்து ஏலியம்பேடில் போராட்டம்
/
தொழிற்சாலையை கண்டித்து ஏலியம்பேடில் போராட்டம்
ADDED : மே 19, 2024 09:45 PM
பொன்னேரி: பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு கிராமத்தில், வாகனங்களுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை இயங்கி வருகிறது.
நேற்று முன்தினம் இரவு கிராமவாசிகள், தொழிற்சாலையை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
மேற்கண்ட தொழிற்சாலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு, கழிவுகள் சாலையில் துாக்கி வீசப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரவு நேரங்களில் தொழிற்சாலையில் இருந்து அதிக சத்தம் ஏற்படுவதால், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அதிர்வலைகள் ஏற்படுகிறது.
கிராமவாசிகள் இரவில் நிம்மதியாக உறங்க முடியவில்லை. மேலும் ஏரிக்கு செல்லும் ஓடையை சேதப்படுத்தி தொழிற்சாலையிலிருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.
இவ்வாறு கூறினர்.

