/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆத்துப்பாக்கம் கிராமத்தில் இருளில் மூழ்கும் சாலை
/
ஆத்துப்பாக்கம் கிராமத்தில் இருளில் மூழ்கும் சாலை
ADDED : மார் 11, 2025 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துபாக்கம் உள்ளது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி முதல் திடீர் நகர் வரையிலான, 150 மீட்டர் சாலையில் மின் விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இந்த வழியாக, ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் தினமும் சென்றுவருகின்றனர். இரவு நேரத்தில் அவ்வழியாக பள்ளிக்கு சென்று வரும் மாணவியர், வேலைக்கு சென்று வரும் பெண்கள்அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
இடைப்பட்ட சாலையில் உள்ள உயரழுத்த கம்பங்களில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என, கிராம வாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.