/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குளமாக மாறிய பாறை குவாரி எச்சரிக்கை பதாகை வேண்டும்
/
குளமாக மாறிய பாறை குவாரி எச்சரிக்கை பதாகை வேண்டும்
குளமாக மாறிய பாறை குவாரி எச்சரிக்கை பதாகை வேண்டும்
குளமாக மாறிய பாறை குவாரி எச்சரிக்கை பதாகை வேண்டும்
ADDED : ஆக 21, 2024 11:11 PM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அருகே காந்தகிரி மலையடிவாரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பாறை குவாரி செயல்பட்டு வந்தது.
தற்போது செயல்பாட்டில் இருந்து கைவிடப்பட்டுள்ளது. குவாரியாக செயல்பட்டு வந்த பகுதியில் பாறை வெட்டி எடுக்கப்பட்டுள்ளதால், குளம் போல் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதில், நீண்டகாலமாக மழைநீர் தேங்கியுள்ளதால், குளம் போல் காட்சியளிக்கிறது. இதை மேலும் செழிப்பாக வெளிப்படுத்தும் விதமாக தாமரை மலர்களும் பூத்து குலுங்குகின்றன.
கடந்த 20 ஆண்டுகளாக இதில் தேங்கியுள்ள மழைநீர் வற்றாமல் நீடிப்பதால், இதை குளம் என்றே சிறுவர்கள் கருதியுள்ளனர்.
ஆனால், இதில், கூர்மையான பாறை முகடுகளும் மறைந்திருக்கும் என்பதை அறிந்திருக்கவில்லை. தற்போதைய மழையால், இதில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. எனவே நீச்சல் பழக இங்கு வந்து செல்கின்றனர். இந்த குவாரியில் இருக்கும் விபரீதம் குறித்து, எச்சரிக்கை பதாகை நிறுவ வேண்டியது அவசியம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.