/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்க பொன்னேரியில் 'ஸ்ட்ராங் ரூம்' தயார்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்க பொன்னேரியில் 'ஸ்ட்ராங் ரூம்' தயார்
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்க பொன்னேரியில் 'ஸ்ட்ராங் ரூம்' தயார்
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்க பொன்னேரியில் 'ஸ்ட்ராங் ரூம்' தயார்
ADDED : மார் 22, 2024 09:38 PM

பொன்னேரி:திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, திருவள்ளூர், பூந்தமல்லி, மாதவரம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
பொன்னேரி சட்டசபை தொகுதியில், ஆண்கள், 1,25,362, பெண்கள், 1,31,296, திருநங்கைகள், 29, என மொத்தம், 2,55,687 வாக்காளர்கள் ஓட்டுபோட உள்ளனர்.
வாக்காளர்கள் வசதிக்காக, 311 ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில், வைப்பதற்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு அலகு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவு சரிபார்ப்பிற்கான விவிபேட் இயந்திரங்கள் பொன்னேரிக்கு கொண்டு வரப்பட உள்ளன.
இவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கான 'ஸ்ட்ராங் ரூம்' அமைக்கும் பணி பொன்னேரி எம்.ஜி.ஆர்., மீன்வளக்கல்லுாரி வளாகத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக இரண்டு அறைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. அங்குள்ள ஜன்னல்கள் மற்றும் பிரதான நுழைவு வாயிலை தவிர்த்து கூடுதலாக உள்ள கதவுகள் மரப்பலகைகளால் நிரந்தரமாக மூடப்படுகிறது.
அறைகளின் முகப்பு, வெளிப்பகுதிளை சுற்றிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. கூடுதல் கேமராக்கள் பொருத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
மேலும் ஓட்டுப்பதிவு மையங்களுக்குதேவையான ஸ்டேஷனரிபொருட்கள் வைக்கவும் தனிஅறை அமைக்கப்படுகிறது.
பொன்னேரி சப்-கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையில், பொன்னேரி தாசில்தார் மதிவாணன் மற்றும் அதிகாரிகள் நேற்று இப்பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
'ஸ்ட்ராங் ரூம்' பணிகள் முற்றிலும் முடிந்து, இன்று மாலை அல்லது நாளை காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

