/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆட்டோவில் இருந்து விழுந்த மாணவன் பலி
/
ஆட்டோவில் இருந்து விழுந்த மாணவன் பலி
ADDED : ஆக 29, 2024 10:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை,:ஆர்.கே.பேட்டை அடுத்த நாகபூண்டி காலனியை சேர்ந்த சரவணன் மகன் கவிபேரரசு, 11. இவர், அஸ்வரேவந்தாபுரம் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளியில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
ஆட்டோவில் ஓட்டுனருக்கு அருகே அமர்ந்து பயணித்துள்ளார். அப்போது ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த கவிபேரரசு, ஆட்டோவின் பின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். ஆட்டோ ஓட்டுனர் மாணவன் கவிபேரரசை, சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கவிபேரரசு இறந்தார்.
இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

