/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குப்பை தொட்டியாக மாறிய கோவில் கிணறு
/
குப்பை தொட்டியாக மாறிய கோவில் கிணறு
ADDED : ஆக 09, 2024 01:03 AM

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவிலுடன் இணைந்தது, திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோவில்.
இக்கோவிலின் அருகே 1,000 ஆண்டு பழமையான கிணறு உள்ளது. இந்த கிணற்று நீரை பயன்படுத்தி கோவிலை தூய்மை செய்வது, சித்திரை, ஆடி மாதங்களில் நேர்த்திக்கடன் செலுத்தி, பொங்கல் வைக்க வரும் பக்தர்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், சில ஆண்டுகளாக கிணற்று நீர் பயன்படுத்தப்படாததால், மர்மநபர்கள் சிலர், கோவில் கிணற்றை குப்பை கொட்டும் இடமாக மாற்றி விட்டனர். இதனால் கோவில் கிணறு பாழடைந்து வருகிறது.
எனவே, கோவிலுக்குசொந்தமான பழமையான கிணற்றை மீட்டு, அவற்றை துாய்மைப்படுத்த அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.