/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடு ரயில் நிலையத்தில் பயன்பாடில்லாமல் பாழாகும் கழிப்பறை
/
திருவாலங்காடு ரயில் நிலையத்தில் பயன்பாடில்லாமல் பாழாகும் கழிப்பறை
திருவாலங்காடு ரயில் நிலையத்தில் பயன்பாடில்லாமல் பாழாகும் கழிப்பறை
திருவாலங்காடு ரயில் நிலையத்தில் பயன்பாடில்லாமல் பாழாகும் கழிப்பறை
ADDED : ஆக 24, 2024 01:08 AM

திருவாலங்காடு:சென்னை ---அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது திருவாலங்காடு ரயில் நிலையம். இந்த மார்க்கமாக தினமும், 270 புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதில் திருவாலங்காடு சுற்றுவட்டாரத்தில் உள்ள 50 கிராமங்களில் இருந்து சுமார் 70 ஆயிரம் பேர் வரை பயணிக்கின்றனர். இந்நிலையில் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் ஒன்றாவது நடைமேடையில் ஒரு கழிப்பறை மட்டுமே ரயில் பயணியர் பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்றாம், நான்காம் நடைமேடையில் கழிப்பறை கட்டப்பட்ட நிலையில் கட்டி முடித்து 2 ஆண்டுகள் ஆகும் நிலையில் கழிப்பறை மூடி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் கழிப்பறை கட்டடம் பாழாகும் நிலை உள்ளது. எனவே கட்டி முடிக்கப்பட்டு மூடி வைக்கப்பட்டுள்ள கழிப்பறையை திறக்க ரயில்வே துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணியர் கோரிக்கை வைத்துள்ளனர்.