/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருப்பாச்சூரில் மதுக்கூடமாக மாறிய பயணியர் நிழற்குடை
/
திருப்பாச்சூரில் மதுக்கூடமாக மாறிய பயணியர் நிழற்குடை
திருப்பாச்சூரில் மதுக்கூடமாக மாறிய பயணியர் நிழற்குடை
திருப்பாச்சூரில் மதுக்கூடமாக மாறிய பயணியர் நிழற்குடை
ADDED : மார் 04, 2025 12:55 AM

திருப்பாச்சூர், திருவள்ளூர் அடுத்துள்ளது திருப்பாச்சூர். இங்கிருந்து, கடம்பத்துார் செல்லும் நெடுஞ்சாலையில் திருவள்ளூர், திருத்தணி செல்லும் சாலை சந்திப்பு பகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் இதை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிழற்குடை, போதிய பராமரிப்பில்லாததால் செடிகள் வளர்ந்து, விளம்பரங்கள் ஒட்டும் இடமாக மட்டுமின்றி, மதுக்கூடரமாகவும் மாறியுள்ளது.
நிழற்குடையில், காலி மதுபான பாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன. பேருந்துக்காக காத்திருப்போர் மத்தியில், இது அருவருப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருகிலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் இருந்தும், நிழற்குடையை சீரமைக்கவும், பராமரிக்கவும், எந்த நடவடிக்கையும் எடுக்காதது பகுதிவாசிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடைகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் எழுந்துள்ளது.