/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடு கடலில் குளித்த இளைஞர் அலையில் சிக்கி பலி
/
பழவேற்காடு கடலில் குளித்த இளைஞர் அலையில் சிக்கி பலி
பழவேற்காடு கடலில் குளித்த இளைஞர் அலையில் சிக்கி பலி
பழவேற்காடு கடலில் குளித்த இளைஞர் அலையில் சிக்கி பலி
ADDED : ஜன 02, 2025 09:22 PM
பழவேற்காடு:கும்மிடிப்பூண்டி அடுத்த, கோங்கன் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியபிரியன், 22; தனியார் பாலிடெக்னிக் மாணவர். இவர், நேற்று, நண்பருடன் பழவேற்காடு கடலில் குளிக்க சென்றார்.
பழவேற்காடு கலங்கரை விளக்கம் பகுதியில் நண்பர்கள் இருவரும் கடலில் குளித்து விளையாடி கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில், சத்தியபிரியன் இழுத்து செல்லப்பட்டு, கடல்நீரில் மூழ்கி மாயமானார்.
மீனவர்கள் உதவியுடன், சத்தியபிரியனை மீட்டபோது, மூர்ச்சையாகி இருந்தார். அவரை பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதையடுத்து, திருப்பாலைவனம் போலீசார் சத்தியபிரியனின் உடலை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.