ADDED : ஆக 16, 2024 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி : சென்னை, வியாசர்பாடி, நேரு நகர், 2வது தெருவை சேர்ந்தவர் கவுரி, 40; திருநங்கை. இவர் வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு, மெகசின்புரம் டாஸ்மாக் கடையில், மூன்று மதுபாட்டில்களை வாங்கினார். அப்போதுமர்ம நபர், கவுரி கையில் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் 2,460 ரூபாயை பறித்து தப்பினார்.
இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய 17 வயது சிறுவன், வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

