/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விமானங்கள் மீது 'லேசர் லைட்' வெளிச்சம் பாய்ச்சினால் நடவடிக்கை
/
விமானங்கள் மீது 'லேசர் லைட்' வெளிச்சம் பாய்ச்சினால் நடவடிக்கை
விமானங்கள் மீது 'லேசர் லைட்' வெளிச்சம் பாய்ச்சினால் நடவடிக்கை
விமானங்கள் மீது 'லேசர் லைட்' வெளிச்சம் பாய்ச்சினால் நடவடிக்கை
ADDED : மே 03, 2024 08:51 PM
சென்னை:சென்னையில் தரையிறங்கும் விமானங்கள், ஓடுபாதையில் இறங்குவதற்காக, தாழ்வாக பறக்கும் போது, விமானத்தை நோக்கி, 'லேசர் லைட்' அடிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.
இது சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் வண்ணங்களில் ஒளிரச் செய்யப்படுகிறது.
இது, விமான போக்குவரத்துக்கு மிகவும் ஆபத்தானது. இந்த ஒளியை விமானத்தின் மீது பாய்ச்சும் போது, அது விமானியின் கண்களை நோக்கி பாய்வதால், விமானி ஒரு சில வினாடிகள் திணறும் நிலை ஏற்படுகிறது.
சில விமானிகள் விமானத்தை தரையிறக்காமல், மீண்டும் வானில் பறக்கச் செய்து, பின் விமானத்தை தரையிறக்குகின்றனர்.
லேசர் லைட் ஒளி அடிப்பவர்கள் விளையாட்டாக செய்கின்றனர். ஆனால், இதில் பெரிய ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள், பொது நலன் கருதி, விமானங்களின் மீது 'லேசர் லைட்' அடிப்பவர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால், உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கோ அல்லது காவல் துறைக்கோ தெரிவிக்க வேண்டும்.
இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல் துறை வாயிலாக, மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.