/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுத்திகரிப்பு மைய விரிவாக்க பணி விரைந்து முடிக்க அதிரடி உத்தரவு
/
சுத்திகரிப்பு மைய விரிவாக்க பணி விரைந்து முடிக்க அதிரடி உத்தரவு
சுத்திகரிப்பு மைய விரிவாக்க பணி விரைந்து முடிக்க அதிரடி உத்தரவு
சுத்திகரிப்பு மைய விரிவாக்க பணி விரைந்து முடிக்க அதிரடி உத்தரவு
ADDED : ஆக 07, 2024 02:39 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில், கடந்த, 2008ல் 55 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டது.
அப்போது, நகரில், 11 ஆயிரத்து 907 கட்டடங்கள் இருந்தன. அதற்கேற்ற வகையில், 86.97 கி.மீட்டருக்கு குழாய் பதிக்கப்பட்டு, திட்டம் நடைமுறையில் உள்ளது.
சேகரமாகும் கழிவுநீர், புதை குழாய் வாயிலாக, புட்லுார் ஏரி அருகில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிப்பு செய்த பின் ஏரியில் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல், அப்படியே வெளியேற்றப்படுவதால், கழிவு நீர் குளம் போல் தேங்கி உள்ளது.
இதையடுத்து, 10.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அருகில் இருந்த 20க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு, கடந்த ஆண்டு, பணி துவங்கியது.
ஆனால், இப்பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதாக 'நம் நாளிதழில்' செய்தி வெளியானது.
இதையடுத்து, நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் விஜயகுமார் நேற்று, கழிவு நீர் சுத்திகரிப்பு மைய விரிவாக்க பணியினை நேரில் பார்வையிட்டார்.
அப்போது, இதுவரை எவ்வளவு செலவாகி உள்ளது, மீதம் உள்ள பணி எப்போது முடிவடையும் என, நகராட்சி கமிஷனர் திருநாவுக்கரசு, பொறியாளர் நடராஜன் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.
பின், பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். உடன், உதவி பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் இருந்தனர்.