/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் வளர்ச்சி பணிகள் கூடுதல் கலெக்டர் திடீர் ஆய்வு
/
திருத்தணியில் வளர்ச்சி பணிகள் கூடுதல் கலெக்டர் திடீர் ஆய்வு
திருத்தணியில் வளர்ச்சி பணிகள் கூடுதல் கலெக்டர் திடீர் ஆய்வு
திருத்தணியில் வளர்ச்சி பணிகள் கூடுதல் கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : ஏப் 24, 2024 01:00 AM
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில் மொத்தம், 27 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மேற்கொண்டுள்ள தார்சாலை, சுடுகாடு சாலை, அங்கன்வாடி மைய கட்டடம், குடிநீர் தொட்டி மற்றும் கழிவுநீர் கால்வாய் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இதுதவிர இருளர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா திருத்தணி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார். பின் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து திருத்தணி உதவி கோட்ட பொறியாளர் கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சந்தானம் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம், வளர்ச்சி பணிகளை விரைந்து முடிப்பதற்கு ஒப்பந்ததாரர்களுக்கு குறிப்பிட்ட நாள் கால அவகாசம் கொடுத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.