/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி - சென்ட்ரல் இடையே கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கம்?
/
திருத்தணி - சென்ட்ரல் இடையே கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கம்?
திருத்தணி - சென்ட்ரல் இடையே கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கம்?
திருத்தணி - சென்ட்ரல் இடையே கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கம்?
ADDED : மார் 04, 2025 12:36 AM
திருத்தணி, திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து, சென்னை, திருவள்ளூர், ஆவடி, அம்பத்துார், சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களுக்கு தினமும், 15,000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், பல்வேறு பணிகள் மற்றும் வேலைக்காக சென்று வருகின்றனர்.
வணிகர்கள் அதிக அளவில் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு, சென்னைக்கு ரயில்களில்தான் சென்று வருகின்றனர்.
குறிப்பாக, அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், அதிகாலை, 4:30 மணி முதல் காலை, 8:30 மணி வரை, மின்சார ரயில் வாயிலாக, சென்னை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால், திருத்தணியில் இருந்து பயணியருக்கு போதிய மின்சார ரயில்கள் இயக்கப்படுவதில்லை. அதிகாலை, 4:30 மணி, காலை, 5:40 மணி, காலை, 6:30, காலை, 7:00 மணி, காலை, 8:40 மணி ஆகிய நேரத்தில் மட்டுமே, சென்னை சென்ட்ரல், கடற்கரை ஆகிய இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்பின் காலை, 10:15 மணிக்கும், மதியம், 12:40 மணி, 2:40 மணி, மாலை, 3:45 மணி, 5:00 மணி ஆகிய நேரத்தில் மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. சில நேரத்தில் மின்சார ரயிலுக்காக, இரண்டரை மணி நேரத்திற்கு மேல், திருத்தணி ரயில் நிலையத்தில் காத்திருக்க வேண்டியுள்ளது.
அதே, 13 கி.மீ., துாரத்தில் உள்ள அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து, அரைமணி நேரத்திற்கு ஒரு மின்சார ரயில் வீதம், சென்னை சென்ட்ரல், கடற்கரைக்கு இயக்கப்படுகிறது.
எனவே, திருத்தணி ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பயணியர், குறைந்த பட்சம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு மின்சார ரயில் இயக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.